பான் இந்தியா நட்சத்திரம் பிரபாஸ் நடிப்பில் கடந்த 9ந் தேதி வெளியான படம் ‘தி ராஜாசாப்’. பீப்பிள் மீடியா பேக்டரி தயாரிப்பில் மாருதி இயக்கிய இந்தப் படத்தில் மாளவிகா மோகனன், நிதி அகர்வால் மற்றும் ரித்தி குமார் ஆகியோர் கதாநாயகிகளாகவும், சஞ்சய் தத், போமன் இரானி, ஜரினா வஹாப் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய வேடத்திலும் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ளார். இப்படம் கடந்த 9ம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது.இந்த நிலையில், இப்படத்தின் வசூல் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படம் முதல் வாரத்தில் ரூ.238 கோடி வசூல் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Add a Comment
