ராஷ்மிகா மந்தனா சமீபத்திய பேட்டி ஒன்றில் சிக்கந்தர் படம் பற்றி பேசும்போது, “அந்தப் படத்திற்காக ஏ.ஆர் முருகதாஸ் என்னிடம் சொன்ன கதை வேறு. படப்பிடிப்பில் படமாக்கப்பட்ட கதை அதிலிருந்து கொஞ்சம் மாறுபட்டிருந்தது. முதலில் ஏ.ஆர் முருகதாஸ் சொன்ன கதை ரொம்பவே வித்தியாசமாக, என்னை ஈர்ப்பதாக இருந்தது. எதனால் இந்த மாற்றம் நடந்தது என்று எனக்கு தெரியவில்லை.சில நேரங்களில் நடிப்புத்திறமை, படத்தொகுப்பு படமாக்கப்படும் காலம் இவற்றையெல்லாம் பொறுத்துக் கூட சில படங்களுக்கு மாற்றம் நிகழும். சிக்கந்தர் படத்திலும் அதுதான் நிகழ்ந்தது என நினைக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
Add a Comment
