Advertisement

வெற்றிகரமாக 25 நாட்களை கடந்த ‘சிறை’ திரைப்படம்!

அறிமுக இயக்குனர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில், ஜஸ்டின் பிரபாகரன் இசையமைப்பில், விக்ரம் பிரபு, அறிமுக நடிகர் எல்கே அக்ஷய் குமார், அனிஷ்மா மற்றும் பலர் நடிப்பில் கடந்த வருடம் டிசம்பர் 25ம் தேதி வெளியான படம் ‘சிறை’.ஒரு இளம் சிறைக் கைதியின் காதலைப் பற்றி உருக்கமான விதத்தில் சொல்லப்பட்ட இந்தப் படம் ரசிகர்களால் பெரிதும் வரவேற்பைப் பெற்றது. படத்திற்கு நல்ல விமர்சனங்களும் கிடைத்தது. கடந்த ஆண்டில் சில சிறிய பட்ஜெட் படங்கள் நல்ல கதையம்சத்துடன் வெளிவந்து வெற்றி பெற்றன. அது போல மாதக் கடைசியில் வந்த ‘சிறை’ படமும் வெற்றி பெற்றது.2025ம் ஆண்டு டிசம்பர் 25ம் தேதி விக்ரம் பிரபுவின் 25வது படமாக வெளிவந்த இந்தப் படம் இன்றுடன் 25வது நாளைத் தொட்டுள்ளது.

Add a Comment

Leave a Reply