நடிகர் ஜீவா நடித்துள்ள திரைப்படம் ‘தலைவர் தம்பி தலைமையில்’. இந்த படத்தில் தம்பி ராமையா, இளவரசு, பிராத்தனா நாதன், ஜெய்வந்த், ஜென்சன் திவாகர், மணிமேகலை, சர்ஜின் குமார், ராஜேஷ் பாண்டியன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மலையாள இயக்குநர் நிதேஷ் சஹாதேவ் இயக்கியுள்ள இப்படம் கடந்த 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடமிருந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குடும்ப பின்னணியுடன் கூடிய கதையமைப்பில் உருவாகியுள்ள இப்படம் பலரையும் கவர்ந்து வருகிறது.
இந்த திரைப்படத்தில் கல்யாண வீட்டில் அலப்பறை செய்யும் மணமகளாக நடித்துள்ள பிராத்தனா நாதன், தனது நடிப்பின் மூலம் ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளார். அவரது நடிப்புக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இதற்கு முன்பு அவர் தமிழில் ‘லவ் டுடே’, ‘பார்க்கிங்’ போன்ற படங்களில் நடித்திருந்தார். அந்த படங்களிலும் அவரது நடிப்பு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.
