சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்ற ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படம்!

சர்வதேச திரைப்பட விமர்சன தளம் லெட்டர்பாக்ஸ்ட் வெளியிட்ட பட்டியலில் ‘டூரிஸ்ட் பேமிலி’ படம், 6-ம் இடத்தை பெற்றுள்ளது. சர்வதேச திரைப்பட விமர்சன தளம் லெட்டர்பாக்ஸ்ட் . உலகம் முழுவதும் உள்ள திரைப்பட ரசிகர்கள், விமர்சகர்கள், சினிமா ஆர்வலர்கள் பயன்படுத்தும் முன்னணி திரைப்பட விமர்சன தளம் இது. பயனர்களின் மதிப்பீடுகள், விமர்சனங்கள், பார்வை அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு பிரிவுகளில் சிறந்த திரைப்படங்களைத் தேர்ந்தெடுத்து ஆண்டுதோறும் வெளியிடும் இந்த தளத்தில் பொழுதுபோக்கு படப் பிரிவில் ‘டூரிஸ்ட் பேமிலி’ படம் இடம்பெற்றுள்ளது. உலகளாவிய அளவில் வெளியாகியுள்ள இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே தமிழ்த் திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading