புகழ்பெற்ற வங்காள திரைப்பட நடிகை ஜெயஸ்ரீ கபீர் காலமானார்!

புகழ்பெற்ற வங்காள திரைப்பட நடிகையும், முன்னாள் மிஸ் கொல்கத்தாவும் ஆன ஜெயஸ்ரீ கபீர், கடந்த 12-ந்தேதி லண்டனில் காலமானார். அவருக்கு வயது 73. அவரது மறைவுக்கு திரை உலகினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.1968-ல் ‘மிஸ் கொல்கத்தா’ பட்டத்தை வென்ற இவர், பழம்பெரும் இயக்குநரான சத்யஜித் ரே இயக்கிய ‘பிரதித்வந்தி’ (1969) திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார். கொல்கத்தாவில் ‘பிக்னிக்’, ‘சப்யசாச்சி’ உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த ஜெயஸ்ரீ கபீர், இந்தியாவில் மட்டுமின்றி, வங்காளதேசத்திலும் புகழ்பெற்ற நடிகையாக திகழ்ந்தார்

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading