‘மண்டாடி’ முதல் பாடல் வெளியீடு… ரசிகர்களை கவரும் சூரியின் அசத்தல் நடனம் !

சூரி நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘மண்டாடி’. மதிமாறன் புகழேந்தி இயக்கும் இந்தப் படத்தை எல்ரெட் குமார் தனது ஆர்.எஸ். இன்போ நிறுவனத்தின் சார்பில் தயாரித்து வருகிறார். மீனவர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படத்தில் மகிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ளார்.

மேலும், தெலுங்கு நடிகர் சுஹாஸ், நடிகர் சத்யராஜ், ரவீந்திரா விஜய், அச்சுத் குமார், சச்சனா நமிதாஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கும் இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ரூ.75 கோடி செலவில் உருவாகி வருகிறது.

சூரியின் திரைப்பயணத்தில் அதிக பொருட்செலவில் உருவாகும் முதல் திரைப்படம் இதுவாகும். வரும் செப்டம்பர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘மண்டாடி’ படத்தின் முதல் பாடலான ‘மண்டாடி மண்டாடி’ வீடியோ பாடலை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இந்த பாடலை வாஹீசன் ராசையா மற்றும் வி.எம். மகாலிங்கம் இணைந்து பாடியுள்ளனர். பாடல் வரிகளை வாஹீசன் ராசையா எழுதியுள்ளார்.

ஜி.வி. பிரகாஷின் இசையில் உருவாகியுள்ள இந்த பாடல், படத்தின் கிராமிய பின்னணி மற்றும் மீனவர்களின் வாழ்க்கை முறையை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது. மேலும், இந்த பாடலில் இதுவரை இல்லாத வகையில் நடிகர் சூரி உற்சாகமான நடனத்தில் கலக்கியிருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பாடல் வெளியான சில மணி நேரங்களிலேயே சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading