விஜய்யின் ‘தெறி’ படத்தின் ரீ-ரிலீஸ் ஒத்திவைப்பு!

கடந்த 2016ஆம் ஆண்டு அட்லி இயக்கத்தில் விஜய், சமந்தா, எமி ஜாக்சன், இயக்குனர் மகேந்திரன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் ‘தெறி’. இந்த படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று, வெற்றிப் படமாக அமைந்தது. இதன் மூலம் தான் விஜய் – அட்லி கூட்டணி முதன்முறையாக உருவானது. அதன் பின்னர், ‘மெர்சல்’, ‘பிகில்’ ஆகிய படங்கள் மூலம் இந்த கூட்டணி தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்தது.

‘தெறி’ திரைப்படம் திரைக்கு வந்து கிட்டத்தட்ட 10 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில், இந்த படத்தை மீண்டும் ரீ-ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் எஸ்.தாணு திட்டமிட்டிருந்தார். இதற்கிடையே, விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படம் தணிக்கை சான்றிதழ் பிரச்னை காரணமாக வெளியீடு தள்ளிப்போனது. இதனைத் தொடர்ந்து, ‘தெறி’ படத்தை பொங்கல் தினமான ஜனவரி 15ஆம் தேதி ரீ-ரிலீஸ் செய்ய உள்ளதாக தயாரிப்பாளர் தாணு அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

ஆனால், தற்போது திடீரென ‘தெறி’ படத்தின் ரீ-ரிலீஸும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தாணு தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், வரவிருக்கும் புதிய படங்களின் தயாரிப்பாளர்கள் கேட்டுக்கொண்டதன் பேரில், ‘தெறி’ ரீ-ரிலீஸ் தள்ளிவைக்கப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளார். இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே கலவையான எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading