பிரபல வில்லன் நடிகர் வித்யூத் ஜம்வால் ஆடையின்றி போஸ் கொடுத்த வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அவர் உடலில் துணி இல்லாமல் மரத்தில் ஏறும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இது இணையத்தில் பெரும் பேசுபொருள் ஆகியுள்ளது. ‘துப்பாக்கி’ படத்தில் வில்லனாக நடித்த வித்யூத் ஜம்வால் பாலிவுட்டில் வில்லனாகவும், ஹீரோவாகவும் நடித்தார். தமிழில் ‘அஞ்சான், பில்லா 2’ படங்களிலும் நீண்ட இடைவேளைக்கு பிறகு ‘மதராஸி’ படத்திலும் வில்லனாக நடித்தார். தற்போது ‘ஸ்ட்ரீட் பைட்டர்’ என்ற ஹாலிவுட் படத்தில் நடித்து வருகிறார்.
Add a Comment
