குடும்பஸ்தன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சான்வி மேக்னா. அதையடுத்து தமிழில் பட வாய்ப்புகள் இல்லாமல் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தெலுங்கில் நவீன் பொலிஷெட்டி நடிப்பில் நாளை ஜனவரி 14ம் தேதி சங்கராந்தியை முன்னிட்டு திரைக்கு வரும் படம் அனாகனக ஒக ராஜு. இந்த படத்தில் சான்வி மேக்னா ஒரு சிறப்பு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடியுள்ளார். இதுகுறித்த வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
Add a Comment
