‘நந்தன் 2’… இயக்குனர் இரா.சரவணன் கொடுத்த முக்கிய அப்டேட்!

சசிகுமார் இயக்குநராக அறிமுகமான ‘சுப்ரமணியபுரம்’ திரைப்படம் தமிழ் சினிமாவில் கவனம் பெற்றதைத் தொடர்ந்து, ‘ஈசன்’ படத்தையும் அவர் இயக்கினார். அதன் பிறகு நடிப்பில் கவனம் செலுத்தி வந்த சசிகுமார், ‘அயோத்தி’, ‘கருடன்’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். இதனிடையே ‘கத்துக்குட்டி’, ‘உடன்பிறப்பே’ ஆகிய படங்களை இயக்கிய இரா.சரவணன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘நந்தன்’. இப்படத்தில் சசிகுமார், ஸ்ருதி பெரியசாமி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்; ஜிப்ரான் இசையமைத்திருந்தார்.

கிராம பஞ்சாயத்து தேர்தல்களில் நிலவும் சாதிய பாகுபாடுகள் மற்றும் அதிகாரப் பகிர்வில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை மையமாகக் கொண்டு ‘நந்தன்’ உருவானது. யதார்த்தமான அரசியல் மற்றும் சமூகப் பின்னணியுடன் இப்படம் அந்த பிரச்னைகளை பதிவு செய்திருந்த நிலையில், விமர்சகர்கள் மற்றும் திரைத்துறையினரிடம் இருந்து பாராட்டுகளைப் பெற்றது. அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் படத்திற்கு தங்களது பாராட்டுகளை தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், ‘நந்தன்’ திரைப்படம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு அதன் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பை இயக்குநர் இரா.சரவணன் வெளியிட்டுள்ளார். ‘நந்தன் 2’ என்ற பெயரில் உருவாகும் இப்படத்தை இரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. மேலும், முதல் பாகத்திற்கு இசையமைத்த ஜிப்ரானுக்கு பதிலாக, இப்படத்திற்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைக்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading