ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ‘கூலி’ படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ், அடுத்து ‘டிசி’ என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து, அவர் அல்லு அர்ஜுன் மற்றும் அமீர்கான் நடிக்கும் படங்களை இயக்க உள்ளதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி வந்தன. இந்த நிலையில், அல்லு அர்ஜுன் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு டீசருக்கான படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருவதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து சமூக வலைதளத்தில் அல்லு அர்ஜுனிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு, அவர் “Wait for it” என பதிலளித்துள்ளார். இதனால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. தற்போது அல்லு அர்ஜுனின் 22-வது படத்தை அட்லி இயக்கி வரும் நிலையில், அவரது 23-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவார் என பலரும் நம்புகின்றனர்.
இந்த திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன.
