யுவன் குரலில் வெளியான ‘பராசக்தி’ படத்தின் ‘சேனைக் கூட்டம்’ பட பாடல்!

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் ‘பராசக்தி’. சிவகார்த்திகேயனின் 25வது படமாக உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில், ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தி திணிப்புக்கு எதிரான மொழிப்போரை மையக்கருவாக கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். சமூக மற்றும் அரசியல் பின்னணியுடன் உருவாகியுள்ள இந்த திரைப்படம், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘பராசக்தி’ திரைப்படத்தின் டிரெய்லர் ஜனவரி 5ஆம் தேதி வெளியானது. வெளியான குறுகிய காலத்திலேயே, இந்த டிரெய்லர் 53 மில்லியன் பார்வைகளை கடந்து, புதிய சாதனையை படைத்துள்ளது. இதன் மூலம், படம் குறித்த எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், யுவன் சங்கர் ராஜா குரலில், ‘பராசக்தி’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘சேனைக் கூட்டம்’ பாடல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த பாடலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading