விசைத்தறி தொழிலை மையமாகக் கொண்டு உருவா ன ‘ராட்ட’ திரைப்படம்!

வரும் 2026 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ மற்றும் சிவகார்த்திகேயன் நடித்த ‘பராசக்தி’ ஆகிய திரைப்படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது ‘ஜனநாயகன்’ படம் வெளியீடு தள்ளிப்போனதால், அந்த இடத்தை சில சிறுபட்ஜெட் திரைப்படங்கள் நிரப்பக்கூடும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த வரிசையில், ‘ராட்ட’ என்ற சிறுபட்ஜெட் திரைப்படம் பொங்கல் வெளியீடாக வருகிற 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எப்.எம்.எஸ். மீடியாஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை சக்திவேல் நாகப்பன் இயக்கியுள்ளார்; அதே நேரத்தில் கதையின் நாயகனாகவும் அவரே நடித்துள்ளார். இப்படத்தில் ஹெலன் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இப்படத்தில் சித்தா தர்ஷன், சாப்லின் பாலு, சந்திரன், கிருஷ்ணன், முத்துராஜா, பம்பாய் சுப்ரமணி, கல்பனா, வசந்தி, ஜெயஸ்ரீ, ரத்னா, செல்லம்மா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். வெற்றி ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ள நிலையில், மணி கிருஷ்ணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

திரைப்படம் குறித்து இயக்குநர் சக்திவேல் நாகப்பன் பேசுகையில், “விசைத்தறி தொழிலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு வாழ்வியல் திரைப்படம் இது. காதலுடன் கண்ணியத்தையும், அதனுடன் கர்வத்தையும் இணைத்து இந்தக் கதையை சொல்லியுள்ளோம். திருமணத்திற்கு முன்பு சேமிப்பு பழக்கம் இல்லாத ஒரு இளைஞன், திருமணத்திற்குப் பிறகு அத்தியாவசிய தேவைகளுக்காக கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு, வாழ்க்கையில் பல்வேறு திருப்பங்களை எதிர்கொள்கிறார். கணவனின் சிரமங்களை உணர்ந்து புரிந்துகொள்ளும் மனைவியும் அவனுடன் கைகோர்த்து பயணிக்கிறார். இறுதியில் இருவரும் வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்களா என்பதே கதையின் மையமாக அமைகிறது. விசைத்தறி தொழிலாளர்களின் வலி நிறைந்த வாழ்க்கை இந்தப் படத்தின் மூலம் மக்களுக்கு இன்னும் ஆழமாக புரியும்” என்று தெரிவித்துள்ளார்.

Tags: Vijay, Jananayagan, Sivakarthikeyan, Parasakthi, Raatta, FMS Medias, Shakthivel Nagappan, Helen, Pongal Release, Tamil Cinema, Tamil Cinema News, Tamil News, Tamil Movies, Tamil New Movies, Cinema News, Cinema News Tamil, Kollywood, Kollywood Tamil News

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading