‘பெத்தி’ படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடும் நடிகை ஸ்ருதிஹாசன்!

புச்சிபாபு சனா இயக்கத்தில், ராம் சரண், ஜான்வி கபூர் மற்றும் பலர் நடிக்கும் தெலுங்குப் படம் ‘பெத்தி’. பான் இந்தியா படமாக உருவாகி வரும் இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.இப்படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாட ஸ்ருதிஹாசனை ஒப்பந்தம் செய்திருந்தார்கள். அந்தப் பாடலுக்கான படப்பிடிப்பு இன்று ஹைதராபாத்தில் ஜன்வாடா என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ள அரங்கில் ஆரம்பமாகி உள்ளது.இதற்கு முன்பு ராம் சரண் ஜோடியாக ‘எவடு’ படத்தில் நடித்திருந்தார் ஸ்ருதி. இப்போது அவருடன் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடுகிறார். இதற்காக அவருக்கு பெரும் தொகை சம்பளமாகத் தரப்பட்டுள்ளதாகத் தகவல்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading