ஹிந்தித் திரையுலகத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அமீர்கான். அவரது மகன் ஜுனைத் கான் நாயகனாக நடிக்க தமிழ் நடிகை சாய் பல்லவி நாயகியாக நடிக்கும் ‘ஏக் தின்’ படத்தின் நிகழ்ச்சி ஒன்று மும்பையில் நடைபெற்றது. அதில் படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்களை மேடையில் கலைஞர்கள் பாடினார்கள். அவற்றைக் கேட்ட அமீர்கான் கண்ணீர் விட்டு அழுதார். அவருடைய டீ ஷர்ட்டிலேயே கண்ணீரைத் துடைத்துக் கொண்டார். அவர் அருகில் அமர்ந்திருந்த ஜுனைத் மற்றும் சாய் பல்லவி அதைப் பார்த்து நெகிழ்ந்தனர். பின்னர் மேடையில் பேசிய அமீர்கான், “நம் நாட்டில் இப்போது சிறந்த நடிகை சாய் பல்லவி தான்,” என்று பாராட்டினார். காதல் கதையாக உருவாகியுள்ள ‘ஏக் தின்’ படம் மே 1ம் தேதி தமிழில் ‘ஒரு நாள்’ என்றும், தெலுங்கில் ‘ஒக்க ரோஜு’ என்றும் டப்பிங் ஆகி வெளியாக உள்ளது.
Add a Comment
