‘காஞ்சனா 4’ படத்தில் இணைகிறாரா நயன்தாரா? வெளியான புது அப்டேட்!

ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த ‘காஞ்சனா’ திரைப்படத்தின் மூன்று பாகங்களும் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வசூல் சாதனைகளை படைத்த நிலையில், தற்போது அதன் நான்காவது பாகமான ‘காஞ்சனா 4’ உருவாகி வருகிறது. இந்த படத்தில் ராகவா லாரன்ஸுடன் நடிகைகள் பூஜா ஹெக்டே மற்றும் நோரா பதேகி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துவருகின்றனர். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், ‘காஞ்சனா 4’ திரைப்படத்தில் நடிகை நயன்தாரா முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, அவர் இடம்பெறும் காட்சிகள் படத்தின் பிளாஷ்பேக் பகுதிகளில் இடம்பெறும் என்றும் கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் மத்தியில் இந்த தகவல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

எனினும், நயன்தாராவின் கதாபாத்திரம் குறித்த இந்த தகவலை ‘காஞ்சனா 4’ படக்குழு இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. மறுபுறம், நடிகை நயன்தாரா சமீபத்தில் ‘மூக்குத்தி அம்மன் 2’, ‘ஹாய்’, ‘டாக்சிக்’ உள்ளிட்ட திரைப்படங்களில் தனது பணிகளை நிறைவு செய்துள்ளார். மேலும், தற்போது பாலிவுட்டில் நடிகர் சல்மான் கானுடன் இணைந்து புதிய திரைப்படம் ஒன்றிலும் நடித்து வருகிறார். இதனால், ‘காஞ்சனா 4’ தொடர்பான இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

—

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading