நவீன் கணேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பல்ஸ்’. இந்த படத்தில் கதாநாயகனாக மகேந்திரன் நடித்துள்ளார். அவருடன் கூல் சுரேஷ், அர்ச்சனா, கே.பி.ஒய். சரத் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அபிஷேக் இசையமைத்துள்ளார். குளோபர் பிக்சர்ஸ் சார்பில் அழகராஜ் ஜெயபாலன் தயாரித்துள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இந்த விழாவில் பேசிய நடிகை அர்ச்சனா, மாதவிடாய் என்பது எந்த வகையிலும் தீட்டல்ல என்றும், அது கடவுள் பெண்களுக்கு அளித்த ஒரு பெரும் வரம் என்றும் தெரிவித்தார். பெண்களை தாயாக மாற்றும் அடிப்படையே மாதவிடாய் என்பதால், அதில் அவமானப்பட வேண்டிய எந்த விஷயமும் இல்லை என்பதை அவர் உறுதியாக கூறினார்.
மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது தனக்கு ஏற்பட்ட ஒரு அனுபவத்தை நினைவுகூர்ந்த அவர், அந்த நேரத்தில் ஏற்பட்ட உடல் வலியை புரிந்து கொண்டு, ஒரு சகோதரனைப் போல கூல் சுரேஷ் தனக்கு உதவி செய்ததாக கூறினார். பெண்கள் அந்த காலகட்டத்தில் எதிர்கொள்ளும் உடல் வலி மற்றும் மனநிலை மாற்றங்களை புரிந்து கொள்வது மிகவும் அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.
