கமல்ஹாசன் – சு.அருண்குமார் இணையும் புதிய படத்தின் அப்டேட்!

கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்தை இயக்குநர் சு. அருண்குமார் இயக்கவுள்ளார். ‘சித்தா’, ‘வீர தீர சூரன்’ ஆகிய படங்களை இயக்கிய சு.அருண்குமார் கூட்டணியில் உருவாகும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. இந்த படத்தை கமல்ஹாசனின்ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் உள்ளிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் நவம்பர் 6-ம் தேதி மாலை வெளியாகும் எனத் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.இந்தப் படம் காவல்துறையை மையமாகக் கொண்ட கதையாக இருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான அறிகுறியாக, சில மாதங்களுக்கு முன்பு வெளியான படத்தின் லுக் டெஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகின.

இதற்கிடையே, கமல்ஹாசன் நவம்பர் 7-ம் தேதி தனது பிறந்தநாளைக் கொண்டாடவுள்ளார். அவரது பிறந்த நாளையொட்டி புதிய படத்தின் அறிவிப்புகள் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Add a Comment

Leave a Reply