குரு சோமசுந்தரம்- அனுமோல் நடித்துள்ள ‘பாரிஸ் கபே’

‘மின்னல் முரளி’, ‘ஆரண்ய காண்டம்’, ‘குடும்பஸ்தன்’, ‘ஜோக்கர்’, ‘பாட்டில் ராதா’ உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் தனது திறமையான நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை பெற்றவர் நடிகர் குரு சோமசுந்தரம். தற்போது அவர் மீண்டும் ஒரு புதிய திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த படத்தில் அவருடன் இணைந்து மலையாள நடிகை அனுமோல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ‘பாரிஸ் கபே’ என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை சரஞ் நீலன் இயக்குகிறார். இப்படத்திற்கு ‘முகமூடி’ படத்தின் இசையமைப்பாளரான கே.கே. எனப்படும் கிருஷ்ண குமார் இசையமைக்கிறார்.

மேலும், இதற்கு முன்பே குரு சோமசுந்தரம் மற்றும் அனுமோல் இணைந்து ‘ராணி தி ரியல் ஸ்டோரி’ என்ற மலையாள திரைப்படத்தில் நடித்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading