தேனியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நடிகை நமீதா கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், அரசியலுக்கு வந்துள்ள நடிகர் விஜய் சினிமாவை விட்டு விலகுவது குறித்து தனது கருத்துகளை வெளிப்படுத்தினார்.

அவர் கூறுகையில், “நடிகர் விஜய்யைப் போல மிக அழகாக நடனம் ஆடக்கூடியவர்கள் மிகவும் குறைவாகவே உள்ளனர். நடனக் கலைஞர் பிரபுதேவா, தெலுங்கு சினிமாவில் ஜூனியர் என்.டி.ஆர்., அதேபோல் தமிழ் சினிமாவில் விஜய் ஆகியோர் சிறந்த நடனக்கலைஞர்கள்.
எனது பார்வையில் நடிகர்களிலேயே விஜய்தான் மிகச்சிறந்த நடனக்கலைஞர். அரசியலுக்கு வந்த பிறகு அவர் சினிமாவை விட்டு விலகினால், திரையில் அவரது நடிப்பையும் நடனத்தையும் நிச்சயமாக மிஸ் செய்வோம் என்று தெரிவித்தார்.
