லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் ரெஜினா நடித்துள்ள ‘ஆர்எக்ஸ்’ திரைப்படம்!

ரெஜினா கசாண்ட்ரா கதாநாயகியாக நடித்துள்ள புதிய படத்தை விஷால் வெங்கட் இயக்கியுள்ளார். ‘ஆர்எக்ஸ்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நாசர், ரமேஷ் திலக், ஸ்ரீஜா ரவி உள்ளிட்டோர் குறிப்பிடத்தக்க கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் நிறுவனமும் மைத்ரி மூவி மேக்கர்ஸும் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஹிஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார்.

தீபாவளி தினத்தில் வெளியான படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், ‘Truth Always Demands a Voice!’ (உண்மைக்கு எப்போதும் ஒரு குரல் தேவை) என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது. இதன் வழியாக உண்மைக்காகக் குரல் எழுப்புவதை மையமாகக் கொண்ட கதைக்களத்தில் படம் உருவாகியிருப்பதற்கான தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் ரிலீஸ் தேதி உள்ளிட்ட அடுத்தகட்ட அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கெனவே படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்துவிட்ட நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதைத் தொடர்ந்து ரசிகர்களின் கவனத்தைப் பெற்றிருந்த ‘ஆர்எக்ஸ்’ படத்தின் செகண்ட் லுக் போஸ்டரையும் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

Add a Comment

Leave a Reply