ஹார்ட்ரிக் சாதனை படைத்த நடிகர் சூர்யா… 145 கோடியை கடந்த ‘சீன்’ வசூல்!

மலையாளத்தில் ‘ஆவேசம்’, ‘ரோமன்சம்’ எனப் பலரது கவனத்தையும் ஈர்த்த படங்களைக் கொடுத்த ஜித்து மாதவன், தற்போது சூர்யா நடிப்பில் உருவான ‘சீன்’ படத்தை இயக்கியுள்ளார். தீபாவளி வெளியீடாக நவம்பர் 6-ம் தேதி திரைக்கு வந்த இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 2டி என்டர்டெயின்மென்ட் மற்றும் ழகரம் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ளார்.

அதிகாலை 6 மணிக்கே படத்தின் முதல் காட்சி தொடங்கியது. இதற்காகக் காலையிலேயே திரையரங்குகளுக்கு வந்த ரசிகர்கள் உற்சாகத்துடன் படத்தை வரவேற்றுக் கொண்டாடினர். அடுத்தடுத்து தீபாவளி விடுமுறை நாட்கள் இருந்ததால், படத்திற்கான டிக்கெட் முன்பதிவிலும் கணிசமான ஆர்வம் காணப்பட்டது.

இந்த ஆண்டில் ஏற்கெனவே ‘கருப்பு’, ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படங்களில் நடித்திருந்த சூர்யாவுக்கு, ‘சீன்’ மூன்றாவது வெளியீடாக அமைந்துள்ளது. இதில் காவல்துறை அதிகாரி வேடத்தில் அவர் வெளிப்படுத்திய நடிப்பு ரசிகர்களை கவர்ந்துள்ளது .

சீன் படத்திற்குக் கிடைத்து வரும் வரவேற்புக்கு மத்தியில், அதன் முதல் மூன்று நாள் வசூல் குறித்த தகவலும் தற்போது வெளியாகியுள்ளது. உலகளவில் மூன்று நாட்களில் ரூ.145 கோடிக்கும் அதிகமான தொகையை இப்படம் வசூலித்திருப்பதாகப் படக்குழு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. கருப்பு, விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ படங்களின் வெற்றியைத் தொடர்ந்து சீன் படமும் ரசிகர்களை கவர்ந்து வரும் நிலையில் ஒரே ஆண்டில் இந்த மூன்று படங்களும் 100 கோடி வசூலை குவித்த நிலையில் நடிகர் சூர்யா புதிய ஹார்ட்ரிக் சாதனையை படைத்துள்ளார்‌

Add a Comment

Leave a Reply