ஜப்பானில் வெளியாகும் சந்தீப் ரெட்டி வாங்காவின் ‘அனிமல்’ திரைப்படம்!

இயக்குநர் சந்தீப் வங்கா இயக்கத்தில் உருவான இந்தப் படம், வெளியானபோது பெண்ணியவாதிகளிடையே கடும் விவாதங்களை ஏற்படுத்தியிருந்தாலும், உலகளவில் ரூ.917 கோடி வசூலித்து பெரும் வெற்றியை பெற்றது. தந்தை – மகன் உறவை மையமாகக் கொண்டு உருவான இந்தப் படம், வரும் பிப்ரவரி 13ஆம் தேதி ஜப்பானில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்தப் படத்திற்காக இசையமைப்பாளர் ஹர்ஷ்வர்தன் ராமேஷ்வர், ஒலி வடிவமைப்பாளர்கள் சச்சின் சுதாகரன் மற்றும் ஹரிஹரன் முரளிதரன் ஆகியோருக்கு தேசிய விருது கிடைத்தது. இப்படத்தில் நடிகர்கள் பாபி தியோல், அனில் கபூர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மேலும், நடிகை ரஷ்மிகா மந்தனாவின் நடிப்பும் பெரிதும் பாராட்டப்பட்டது. இந்தப் படத்தில் துணை நடிகையாக நடித்த த்ரிப்தி டிம்ரி, தற்போது ஸ்பிரிட் படத்தில் நாயகியாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading