Thursday, May 23, 2024

2024ல் 100 வசூலித்த முதல் தமிழ் படம் என்ற பெருமையை பெற்றது அரண்மனை 4…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சுந்தர் சி இயக்கத்தில் கடந்த மே 3ஆம் தேதி திரைக்கு வந்த அரண்மனை 4 படம், மிகுந்த வரவேற்புடன் இன்னும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி, 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

2024ம் ஆண்டில் ரூ100 கோடியை வசூலித்த முதல் தமிழ் படம் என்ற பெருமையை இப்படம் பெற்றுள்ளது.அரண்மனை மூன்றாம் பாகம் எதிர்பார்த்த வெற்றியை பெறாத போதிலும், பேய் படங்களின் மீதான அதீத நம்பிக்கையால், சுந்தர் சி அரண்மனை நான்காம் பாகத்தை இயக்கி வெளியிட்டுள்ளார்.

இப்படத்தில் சுந்தர் சி, தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா, சிங்கம்புலி, விடிவி கணேஷ், டெல்லி கணேஷ், ஜே பி, விச்சு, கேஜிஎஃப் ராம், சேசு, சந்தோஷ் பிரதாப், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஹிப்ஹாப் ஆதி இசையமைத்த இப்படம் மே 3ஆம் தேதி வெளியாகி பெரும் வெற்றி பெற்றது.60 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்த படம், 100 கோடிக்கு மேல் வசூல் செய்தது என்று படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த ஆண்டு 100 கோடிகளை தாண்டிய மிகப்பெரிய பிளாக் பஸ்டர் படமாக அரண்மனை 4 மாறியுள்ளது. இப்படம் அதிக லாபத்தை பெற்றுத் தந்ததால், தயாரிப்பாளர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

- Advertisement -

Read more

Local News