Thursday, May 23, 2024

குட் பேட் அக்லி படத்தின் டிஜிட்டல் உரிமம் இவ்வளவு கோடிக்கு விற்பனையா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் அஜித் குமார் தற்போது ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து வந்தார்.மேலும் இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் அஜர்பைஜானில் படமாக்கப்பட்டன.அதே சமயத்தில், அவர் ‘குட் பேட் அக்லி’ (Good Bad Ugly) என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். சில நாட்களுக்கு முன் இந்த படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டது.

மேலும் சண்டை காட்சிகளுடன் படப்பிடிப்பு தொடங்கியது. தொடர்ந்து மூன்று கட்டங்களாக படப்பிடிப்பு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.’குட் பேட் அக்லி’ படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்பிளிக்ஸ் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நெட்பிளிக்ஸ் இந்த படத்தை 95 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியதாக கூறப்படுகிறது. இதுவரை இல்லாத அளவிற்கு டிஜிட்டல் உரிமைக்கான மிக உயர்ந்த தொகை இது என சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், அஜித் குமார் மூன்று வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.மேலும், ‘விடாமுயற்சி’ படத்தையும் நெட்பிளிக்ஸ் பெரும் தொகை கொடுத்து கைப்பற்றியுள்ளது.

- Advertisement -

Read more

Local News