Saturday, April 27, 2024

விஷால் சிம்புவை கலாய்த்த சந்தானம்… இங்க நான் தான் கிங்கு டிரெய்லர் வெளியீடு…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.இதில் நடிகர் சந்தானம் நடிகர் சங்கம் கட்டிடத்தை கட்டிவிட்டு திருமணம் செய்து கொள்வேன் என சொல்ல நான் ஒன்றும் விஷால் இல்ல, எப்பவுமே சிங்கிளாக சுத்த நான் ஒன்றும் சிம்புவும் அல்ல என்ற வசனங்கள் டிரெயிலரின் தொடக்கத்திலேயே இடம்பெற்றுள்ளன இப்படி நேரடியாகவே விஷால் மற்றும் சிம்புவை கலாய்த்து காமெடியில் அசத்தியிருக்கிறார்.

இயக்குனர் ஆனந்த் நாராயணன் இயக்கத்தில், கோபுரம் பிலிம்ஸ் அன்புச்செழியன் மனைவி சுஷ்மிதா அன்புச்செழியன் தயாரிப்பில் சந்தானம், பிரியாலயா, தம்பி ராமையா, விவேக் பிரசன்னா, பாலசரவணன், முனீஸ்காந்த், லொள்ளு சபா மாறன், மறைந்த நடிகர் லொள்ளு சபா சேசு உள்ளிட்ட பல நகைச்சுவைக் நடிகர்கள் நடித்து தயாராகி உள்ள படம் தான் இங்க நான் தான் கிங்கு திரைப்படம்.

சிம்பு மற்றும் விஷாலை நேரடியாக கலாய்த்த சந்தானம் நயன்தாராவையும் விட்டுவைக்கவில்லை.இவ்வளவு பிரம்மாண்டமாக திருமணம் நடத்துறது தெரிஞ்சா நெட்பிளிக்ஸ்லையே ரிலீஸ் செய்வேனே என நயன்தாராவையும் மறைமுகமாக கலாய்த்துள்ளார் சந்தானம்.

இந்த படத்துக்கு இமான் இசையமைத்துள்ளார். நகைச்சுவை படமாக உருவாக்கியுள்ள இந்தப் படத்தில் 90ஸ் கிட்ஸ், 2கே கிட்ஸ் பிரச்சனை, நடிகர்களை கலாய்த்து வசனம் என டிரெய்லர் மக்களை குலுங்க குலுங்க சிரிக்க வைத்திருக்கிறது.

- Advertisement -

Read more

Local News