Wednesday, May 22, 2024

விஜய் சேதுபதியை‌ திடீரென சந்தித்த இயக்குனர் ராம்கோபால் வர்மா… விஜய் சேதுபதி குறித்து இணையத்தில் போட்ட அந்த ட்வீட்…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

விஜய் சேதுபதி மற்றும் ராம்கோபால் வர்மா இடையிலான சந்திப்பு, ராம்கோபால் வர்மா ட்விட்டரில் விஜய் சேதுபதியைப் பற்றி பதிவிட்டுள்ளதனால், ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.1989 ஆம் ஆண்டு, நாகார்ஜுனன் நடிப்பில் வெளிவந்த சிவா என்ற தெலுங்கு படத்தை இயக்கி மிகப்பெரிய வெற்றியை பெற்றவர் ராம்கோபால் வர்மா.

மணிரத்னத்தின் திருடா திருடா படத்தின் கதை ஆசிரியராகவும் இவர் இருந்தார். ரங்கீலா, சத்யா, சர்க்கார், ரத்த சரித்திரா போன்ற பல முக்கியமான படங்களை இயக்கியுள்ளார்.கில்லிங் வீரப்பன், வீரப்பன், லட்சுமி என்டிஆர் போன்ற அரசியல் சர்ச்சை படங்களை இயக்கிய வர்மா, திடீரென ‘காட் செக்ஸ் அண்ட் ட்ரூத்’, கிளைமேக்ஸ், நேக்கட், டேஞ்சரஸ் போன்ற படங்களை எடுத்து ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தார்.

இந்நிலையில், ராம்கோபால் வர்மா திடீரென விஜய் சேதுபதியின் அலுவலகத்திற்கு வந்து அவரை சந்தித்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும், விஜய் சேதுபதி திரையில் இருப்பதை விட நேரில் ரொம்பவே அழகாக உள்ளார் என தனது தனித்துவமான பாணியில் ட்வீட்டும் போட்டுள்ளார். இருவரும் இணைந்து விரைவில் படம் எடுக்க உள்ளார்களா என்பது குறித்து திரையுலகில் பரபரப்பாக பேசப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News