Wednesday, May 22, 2024

நாளை மாலை வெளியாகிறது டிரீம் வாரியர் பிக்சர்ஸ்-ன் புதிய திரைப்படத்தின் அப்டேட்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் திரையுலகில் சகுனி, ஜோக்கர், காஷ்மோரா, கூட்டத்தில் ஒருத்தன், தீரன் அதிகாரம் ஒன்று, அருவி, என்.ஜி.கே., ராட்சசி, கைதி, சுல்தான், ஓ2, வட்டம் போன்ற பல படங்களை தயாரித்த முன்னணி நிறுவனம் டிரீம் வாரியர் பிக்சர்ஸ்.

வித்தியாசமான கதைகளைத் தேர்வு செய்து தயாரிக்கும் டிரீம் வாரியர் பிக்சர்ஸ், தங்களது புதிய படத்தின் தலைப்பும் முதல் பார்வை போஸ்டரும் நாளை (மே 23) மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த படம் ஜூன் மாதத்தில் திரையரங்குகளில் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு மேலான தகவல்கள், குறிப்பாக இயக்குநர், நடிகர், நடிகைகள் பற்றிய விவரங்கள் இன்னும் வெளிவரவில்லை.

- Advertisement -

Read more

Local News