Saturday, April 27, 2024

ரிலீஸ் தேதி அறிவிக்க முடியாமல் திணறும் தமிழ் படங்கள்!‌ கங்குவா முதல் ராயன் வரை… 600 கோடியை இழந்த பாலிவுட்?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

விக்ரம் நடிப்பில் ரஞ்சித்தின் இயக்கத்தில் வெளியாகவுள்ள தங்கலன், சூர்யா நடித்த கங்குவா, தனுஷ்-ன் ராயன் ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகிவிட்ட நிலையில் ரிலீஸ் தேதி மட்டும் அறிவிக்கப்படாமல் இருப்பது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சூர்யாவின் கங்குவா, சியான் விக்ரமின் தங்கலன், சூரியின் விடுதலை 2 மற்றும் தனுஷின் ராயன் ஆகிய படங்கள் வெளியீட்டுக்கு தயாராக இருந்தும் இன்னும் ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்படவில்லை.
படங்களின் வெற்றிக்கு சரியான திட்டமிடல் முக்கியமானது என்றும் ஏனெனில் அவற்றுள் கவனம் சிதறினால் படங்கள் பாக்ஸ் ஆபிஸில் வசூலில் தோல்வியடையும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் மலையாளத் திரையுலகம் இந்த ஆண்டு மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது, பிரம்மயுகம், பிரேமலு, மஞ்சுமேல் பாய்ஸ், ஆடு ஜீவிதம், அவேஷம், மற்றும் சேஷம் ஆகிய படங்கள் முதல் நான்கு மாதங்களில் 100 கோடியைத் தாண்டி தூள் கிளப்பி உள்ளன.

இருப்பினும் மற்றொரு புறம் ஃபைட்டர், படே மியான் சோடே மியான், மைதான் போன்ற படங்களின் தொடர்ச்சியான தோல்விகளால் பாலிவுட் திரையுலகம் சுமார் 600 கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விஷாலின் ரத்னம் படம் இன்று ரிலீஸ் ஆன நிலையில் அரண்மனை 4, கவினின் ஸ்டார் , கமல்லின் இந்தியன் 2, சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு என அனைத்து படங்களும் அடுத்தடுத்து ரிலீசாக உள்ளன.இப்படியிருக்க பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸ் செய்ய தாமதமாகி வருவது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

- Advertisement -

Read more

Local News