Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

ரஜினியின் கூலி படத்தில் இணைந்த விஜய் பட நடிகர்! #CoolieUpdate

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கி உள்ளது. இந்த படப்பிடிப்பில் ரஜினி உடன் ஸ்ருதிஹாசன், ரெபா மோனிகா உள்ளிட்ட சிலர் நடித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தற்போது இப்படத்தில் மாஸ்டர் மகேந்திரனும் ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இவர் 2021ம் ஆண்டு விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் படத்தில் சிறுவயது விஜய் சேதுபதியாக நடித்திருந்தார்.

தற்போது மீண்டும் லோகேஷ் இயக்கத்தில் இணைந்திருக்கும் மாஸ்டர் மகேந்திரன், அது குறித்த ஒரு வீடியோவை இணையத்தில் வெளியிட்டுள்ளார். மேலும், இந்த கூலி படத்தில் நடிகர் சத்யராஜ், அபிராமி உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News