Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

மேஜிக் மேனாக மாறிய யோகி பாபு..‌. வெளியான ‘ஜோரா‌ கைய தட்டுங்க’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் சினிமாவின் நகைச்சுவை கதாபாத்திரங்களில் தனக்கென தனித்துவமான பாணியை உருவாக்கியவர் நகைச்சுவை நடிகர் யோகிபாபு. பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘லொள்ளு சபா’ நிகழ்ச்சியில் அறிமுகமான அவர், பின்னர் பல சிறிய காமெடி காட்சிகளில் நடித்து வந்தார்.

GV Prakash Kumar, Arthana Binu & Others At The Sema Press Meet

இன்று, முன்னணி நட்சத்திரங்களின் பாராட்டைப் பெற்ற நடிகராக திகழ்கிறார்.தற்போது தமிழ் சினிமாவில் எந்தப் படத்திற்குப் போனாலும் யோகிபாபுவை காணலாம். அவர் பல படங்களில் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார். யோகிபாபு நடித்த ‘கோலமாவு கோகிலா’, ‘மண்டேலா’ போன்ற திரைப்படங்கள் மிகுந்த வரவேற்பை பெற்றது மட்டுமின்றி, அவருக்கு கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பையும் பெற்றுத் தந்தது.

சிவகார்த்திகேயன் நடித்த ‘மாவீரன்’, ‘ஜெயிலர்’ போன்ற படங்களில் யோகிபாபு சிறப்பாக நகைச்சுவையை வெளிப்படுத்தியுள்ளார்.கடந்த வருடம் அட்லீ இயக்கத்தில் ஷாருக் கான், நயன்தாரா, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்த ‘ஜவான்’ படத்திலும் அறிமுகமாகி, தனது இருப்பை பாலிவுட்டிலும் உறுதி செய்தார்.

தற்போது, வாமா என்டர்டெயின்மென்ட் சார்பில் ஜாகிர் அலி தயாரிப்பில் விநீஷ் மில்லினியம் இயக்கத்தில் ‘ஜோரா கைய தட்டுங்க’ என்ற படத்தில் நடித்துள்ளார். படத்தின் முதல் பார்வை போஸ்டரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இதனை நடிகர் விஜய் சேதுபதி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அந்த போஸ்டரில் யோகிபாபு ஒரு வித்தகனாக மேஜிக் செய்யும் வேடத்தில் சோஃபாவில் அமர்ந்திருக்கிறார். இந்த போஸ்டர் சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிர்ந்துகொள்ளப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News