துல்கர் சல்மான் மிருனாள் தாக்கூர் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ‘சீதாராமம்’. பாலிவுட் நடிகையான மிருணாள் தாக்குர் தென்னிந்திய ரசிகர்களின் மனதில் மிகப்பெரிய இடத்தை இப்படம் மூலம் பிடித்தார்
ஹனு ராகவபுடி இயக்கிய இந்தப் படத்தில் இளவரசியாக சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இதை அடுத்து மிருணாள் தாக்குருக்கு சில தெலுங்கு பட வாய்ப்புகள் கிடைத்தன.
இந்நிலையில் ஹனு ராகவபுடி இயக்கும் அடுத்த படத்தில் பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. வரலாற்றுப் பின்னணியில் உருவாகும் ஆக் ஷன் படமான இதில் பாகிஸ்தான் நடிகை சஜல் அலி நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் இதில் மிருணாள் தாக்குரும் நாயகியாக நடிக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.