Saturday, May 25, 2024

தனது மகள் திருமண அழைப்பிதழை கொடுக்க முதலமைச்சரை சந்தித்த நடிகர் அர்ஜுன்…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

அக்‌ஷன் கிங் அர்ஜுனின் மூத்த மகளான ஐஸ்வர்யா அர்ஜுனும், தம்பி ராமைய்யாவின் மகன் உமாபதி ராமைய்யாவும் கடந்த ஆண்டு அக்டோபரில் ஆஞ்சநேயர் கோவிலில் நிச்சயதார்த்தம் கொண்டாடினர். இந்த நிகழ்வு பிரமாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில், நடிகர் அர்ஜுனின் மகளுக்கும், தம்பி ராமைய்யாவின் மகனுக்கும் ஜூன் மாதத்தில் திருமணம் நடைபெற உள்ளதால், திருமண அழைப்பிதழ்களை பிரபலங்களுக்கு நேரில் வழங்கும் பணியை அர்ஜுன் தொடங்கியுள்ளார்.

கடந்த அக்டோபர் 28ம் தேதி ஐஸ்வர்யா மற்றும் உமாபதியின் நிச்சயதார்த்த விழா நடைபெற்றது. அந்த விழா மிகவும் கலர்ஃபுல் மற்றும் அரசகுமார, அரசகுமாரி திருமணம் போலவே நடந்தது. பர்மாவில் இருந்து 5 காரட் மாணிக்க மோதிரம் கொண்டு வந்து, அதை உமாபதி ஐஸ்வர்யாவின் விரலில் அணிவித்தார். இதனை அர்ஜுன் மிகுந்த அக்கறையுடன் ஏற்பாடு செய்தார்.

மாப்பிள்ளை உமாபதிக்கு தங்கம் மற்றும் வைரம் கலந்த மோதிரம், அதன் மத்தியில் சிறிய மாணிக்கம் பொறிக்கப்பட்டிருந்தது. இருவரின் ஆடைகளும் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு, பிங்க் நிறத்தில் கண்கவர் தோற்றம் அளித்தன. நிச்சயதார்த்தத்துக்கு வந்த விருந்தினர்களுக்கு தங்கத்தட்டில் பல மாநிலங்களில் இருந்து சிறப்பு உணவுகள் வழங்கப்பட்டன.

நடிகர் விஷால், இயக்குநர் ஏ.எல். விஜய், சாண்டி மாஸ்டர் உள்ளிட்ட பலரும் விழாவில் கலந்து கொண்டனர்.தனது மகளின் திருமணத்துக்கான அழைப்பிதழ்களை வழங்கும் பணியை தொடங்கிய நடிகர் அர்ஜுன், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை குடும்பத்துடன் நேரில் சென்று அழைப்பு வழங்கினார். தம்பி ராமைய்யாவும் தனது குடும்பத்துடன் முதலமைச்சரை சந்தித்தார்.

- Advertisement -

Read more

Local News