தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகராக இருந்துவந்த பிரபாஸ், பாகுபலி படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானார். அதைத் தொடர்ந்து இவர் நடிக்கும் அனைத்து திரைப்படங்களும் இந்திய அளவில் வெளியாகின்றன. சமீபத்தில், பிரபாஸ் நடிப்பில் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவான ‘கல்கி 2898 ஏ.டி’ திரைப்படம் ரூ.1,000 கோடிக்கும் மேல் வசூல் சாதனை செய்தது.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2024/07/1000046436-683x1024.jpg)
இதற்கு அடுத்ததாக, மாருதி இயக்கத்தில் காதல், நெகடிவ் எனர்ஜி, காமெடி கதைக்களத்தில் உருவாகும் ‘தி ராஜா சாப்’ படத்தில் நடிக்க பிரபாஸ் ஒப்பந்தமாகியுள்ளார். தமன் இசையமைக்கும் இப்படத்தில் பிரபாசுடன், மாளவிகா மோகனன், நிதி அகர்வால், ரித்தி குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது.இந்நிலையில் தி ராஜா சாப் படத்தின் Glimpse வீடியோ வெளியாகியுள்ளது.
இந்நிலையில், பிரபாஸ் நடிக்கும் அடுத்த படத்தில் கதாநாயகியாக பாகிஸ்தான் நடிகை சஜல் அலி நடிக்க உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை. பீப்பிள் மீடியா பேக்டரி மற்றும் ஜிஎஸ்கே மீடியா ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றன.