Thursday, May 23, 2024

பாலிவுட்டில் தனது சம்பளத்தை உயர்த்திய ஜோதிகா… எவ்வளவு தெரியுமா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகை ஜோதிகா 90களின் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர். பல வெற்றிப் படங்களில் நடித்துள்ள இவர், சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் இருக்கிறார்கள். நடிப்பில் இருந்து சில வருட இடைவெளியடைந்த ஜோதிகா, மீண்டும் திரையில் நடிக்கத் தொடங்கியுள்ளார். அப்படியொரு முயற்சியில் ஹிந்தி படங்களான ஷைத்தான் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியவற்றிலும் நடித்துள்ளார்.

தற்போது அவரை பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.ஒருபுறம் சினிமாவில் பிஸியாகவும், மறுபுறம் காதலில் மூழ்கியிருந்த ஜோதிகாவுக்கு சூர்யாவின் வீட்டில் காதலுக்கு அனுமதி கிடைக்கவில்லை. எனினும், இருவரும் பொறுமையாக காத்திருந்து, சிவக்குமாரை சமாதானப்படுத்தி 2007ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.

சூர்யா மற்றும் ஜோதிகா, ஒருவரையொருவர் புரிந்துகொண்டு காதலோடு திருமண வாழ்க்கையை மேற்கொண்டு வருகின்றனர்.ஜோதிகா திரையில் மீண்டும் நடிக்கத் தொடங்கியுள்ளார்.இப்போது ஹிந்தியிலும் கவனம் செலுத்துகிறார். சில மாதங்களுக்கு முன்பு ஷைத்தான் படம் வெளியானது. அடுத்ததாக ஸ்ரீகாந்த் படம் வந்தது, இது விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக, ஜோதிகாவின் நடிப்புக்கு சிறந்த வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில், தமிழில் சூர்யாவுடன் சேர்ந்து ஒரு ரொமான்ஸ் படத்தில் நடிக்க ஜோதிகா ஆர்வமாக இருப்பதாகவும், ஆனால் அப்படியொரு இயக்குநர் தமிழில் குறைவாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். சில்லுக்கருப்பட்டி இயக்குனர் ஹலீதா ஷமீம் தான் அப்படியொரு படத்தை இயக்குவார் என ஜோ வெளிப்படையாகக் கூறியுள்ளார்.

இதனால், ஹலீதா இயக்கத்தில் சூர்யா மற்றும் ஜோதிகா இணைவார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில், பாலிவுட்டில் நடிப்பதற்காக ஜோதிகா தனது சம்பளத்தை 5 கோடி ரூபாயாக உயர்த்தியிருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

Read more

Local News