“டபுள் டக்கர்” படம் ரசிகர்களிடையே சிறந்த வரவேற்பைப் பெற்றது இதைதொடர்ந்து, நடிகர் தீராஜ் நடிக்கவிருக்கும் புதிய படம் “பிள்ளையார் சுழி.” மணோகரன் பெரியதம்பி இந்தப் படத்தை இயக்கி உள்ளார், அதன் படப்பிடிப்பு நிறைவடைந்து, இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன.
சிலம்பரசி மற்றும் எயர் ஃப்ளிக்ஸ் இணைந்து தயாரித்த இந்தப் படத்தின் கதை மாற்று திறனாளி குழந்தையின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது என்று இயக்குநர் கூறியுள்ளார். இதில் தீராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, அபிநயா அவருடன் இணைந்து நடித்துள்ளார்.இந்தப் படத்தில் ரேவதி, மைம் கோபி, மத்தியு வர்கீஸ், பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன், தர்ஷன், ஜீவா ரவி, பழனி தேவி, ஆர்ஜே மகாலட்சுமி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
குழந்தை நட்சத்திரங்கள் உண்ணி கிருஷ்ணன், ஆர்னா, ஃபர்ஹானா மற்றும் ஸ்ரீ ஷரவண் ஆகியோர் முக்கியப் பாத்திரங்களில் நடித்துள்ளனர்.”பிள்ளையார் சுழி” படத்திற்கு பிரசாத் ஒளிப்பதிவாளராகவும், ஹரி எஸ்.ஆர். இசையமைப்பாளராகவும், ரேஷ்மன் குமார், மோகன்ராஜன், மற்றும் கோதை தேவி பாடல் வரிகளை எழுதியுள்ளனர். “பிள்ளையார் சுழி” நியூயார்க் திரைப்பட விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்டு சமீபத்தில் இறுதிச் சுற்றில் இடம் பெற்றது.