Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

பற்றி எரிந்த பாலகிருஷ்ணா விவகாரம்… ஒரே ட்வீட்டில் ஆஃப் செய்த நடிகை அஞ்சலி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

விஸ்வக் சென் மற்றும் அஞ்சலி நடித்துள்ள தெலுங்கு திரைப்படம் “கேங்ஸ் ஆஃப் கோதாவரி” இன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. சமீபத்தில் நடைபெற்ற அதன் ப்ரீ ரிலீஸ் விழாவில், நடிகர்‌ பாலகிருஷ்ணா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் அந்த சமயத்தில் நடிகை அஞ்சலியை மேடையில் தள்ளியது பரபரப்பை ஏற்படுத்தியது.

பாலகிருஷ்ணாவின் அதிரடி நடவடிக்கைகள் தெலுங்கு திரையுலகில் அனைவரும் அறிந்ததே. ஆனால், அவரது இந்த செயல் நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்தது, பொது மேடையில் அஞ்சலியை தள்ளியது மிகப்பெரிய தவறு என கடந்த இரண்டு நாட்களாக அவர்‌ விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறார்.பாலகிருஷ்ணாவின் இந்த செயல் சாதாரணமானதே, தவறான நோக்கத்தில் அஞ்சலியை தள்ளவில்லை என்பதில் படக்குழுவினர் உறுதியாக உள்ளனர்.

இதற்காக அஞ்சலி எந்தவித எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. தேவையில்லாமல் இப்பிரச்சனை ஊதிப் பெரிதாக்க வேண்டாம் என “கேங்ஸ் ஆப் கோதாவரி” படத்தின் ஹீரோ விஸ்வக் சென் மற்றும் பட தயாரிப்பாளர் உட்பட பல பிரபலங்கள் பாலகிருஷ்ணாவுக்குத் தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர்.இந்த விவாதம் கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் நிலையில், நடிகை அஞ்சலி நேற்று நள்ளிரவில் தனது ட்விட்டர் பக்கத்தில் பாலகிருஷ்ணாவுக்கு நன்றி தெரிவித்து ஒரு டிவீட் வெளியிட்டார்.

அதில், “நான் மற்றும் பாலகிருஷ்ணா காரு பல ஆண்டுகளாக நண்பர்களாக இருந்து ஒருவரை மற்றொருவர் மதித்து வருகிறோம். கேங்ஸ் ஆஃப் கோதாவரி படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மேடையை அவரோடு பகிர்ந்துகொண்டதில் பெருமைப்படுகிறேன்,” என கூறி, இந்த விவகாரத்தை முடித்து வைத்தார்.

- Advertisement -

Read more

Local News