Wednesday, May 22, 2024

குடும்பத்துடன் ஜாலியாக ஆட்டோ ரைடு‌… விக்னேஷ் சிவன் வெளியிட்ட வீடியோ‌ வைரல்…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகை நயன்தாரா ரசிகர்களால் “லேடி சூப்பர் ஸ்டார்” என்று அறியப்படுபவர். அவர் இதுவரை 75 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார். சமீபத்தில் அவர் கடைசியாக ‘அன்னபூரணி’ படம் பெரிய வரவேற்பைப் பெறவில்லை.ஆனால் பாலிவுட்டில் ஷாருக்கானோட நடித்த ஜவான் படம் ப்ளாக் பஸ்டர் ஹிட் ஆனது.

அடுத்ததாக அவர் ‘மண்ணாங்கட்டி’ படத்தில் நடித்து முடித்துள்ளார், மேலும் ஒரு மலையாள படத்திலும் கமிட்டாகியுள்ளார். இந்நிலையில், நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் குழந்தைகள் உயிர், உலக் ஆகியோருடன் இணைந்து பகிர்ந்த வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.

நயன்தாரா திரைப்படங்களில் பிஸியாக இருந்தாலும், தனது குடும்பத்தினருடன் கூட நேரம் செலவிடுவதில் ஆர்வமாக உள்ளார். இது சார்ந்த வீடியோக்களையும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்வதுண்டு. சமீபத்தில் அவர் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்த வீடியோவில், நயன்தாரா, விக்னேஷ் சிவன், உயிர், உலக் ஆகியோர் ஆட்டோவில் ஆனந்தமாக பயணம் செல்லும் காட்சி இடம்பெற்றுள்ளது.

இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள், நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டாராக இருந்தாலும், தனது மகன்களுக்குப் பாமரமான வாழ்க்கையைப் போதிப்பதை மிகவும் பாராட்டி, அந்த வீடியோவை ட்ரெண்டாக்கியுள்ளனர்.

- Advertisement -

Read more

Local News