Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

நடிகை அஞ்சலியை தள்ளிவிட்டாரா பிரபல தெலுங்கு நடிகர்? ட்ரெண்டாகும் வீடியோ!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -
LISTEN TO PLAY AUDIO NEWS?

தெலுங்கில் ‘கேங்ஸ் ஆஃப் கோதவரி’ என்ற திரைப்படம் உருவாகியுள்து. இந்த படத்தை இயக்குனர் கிருஷ்ண சைதன்யா இயக்கியுள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் விஷ்வாக் சென் நடித்துள்ளார், கதாநாயகியாக அஞ்சலி நடித்துள்ளார். மேலும், நேகா செட்டி, சாய் குமார், நாசர், கோபராஜு ரமணா, ஆயிஷா கான் உள்ளிட்ட பலரும் இதில் நடித்துள்ளனர். இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில், இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் விழா ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் படத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக தெலுங்கு சூப்பர் ஸ்டார் பாலகிருஷ்ணா பங்கேற்றார்.

இந்த நிகழ்ச்சியில் நடிகை அஞ்சலியை பாலகிருஷ்ணா தள்ளிவிடும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது. அவர் ஏன் இப்படி செய்தார் என்பது புரியவில்லை. ஆனால், நடிகை அஞ்சலியும் மற்றவர்களும் இதனை விளையாட்டாக சிரிப்புடன் எடுத்துக்கொண்டனர் என தெரிகிறது.

வீடியோவில், மேடையில் அனைவரும் நிற்கும்போது, பாலகிருஷ்ணா அஞ்சலிக்கு கையை நீட்டி பின்னோக்கி நிற்குமாறு கூறுகிறார். இதை கவனிக்காத அஞ்சலியின் தோளை  பின்னோக்கி தள்ளுகிறார். இதனால் எதிர்பாராத அஞ்சலி இரண்டு அடி பின்நோக்கி‌ சென்றார்.அதிர்ஷ்டவசமாக அவர் கீழே விழவில்லை.இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, பயனர்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

- Advertisement -

Read more

Local News