பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் முன்னணி நடிகர் கார்த்தி நடித்த படம் “சர்தார்,” 2022ஆம் ஆண்டில் வெளியானது. இப்படம் மக்களிடையிலும் வசூலிலும் சிறந்த வரவேற்பைப் பெற்றது இந்த படத்தில், கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்த இப்படத்தில் ராஷி கன்னா, லைலா, ராஜீஷா விஜயன், யுகி சேது உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

மாபெரும் வெற்றியடைந்த இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அடுத்த மாதம் படப்பிடிப்பு துவங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

“சர்தார் 2” படப்பிடிப்பு முடிந்த பின், கார்த்தி, விக்ரம் பிரபு நடிப்பில் டாணாக்காரன் இயக்கிய இயக்குனர் தமிழ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளனர்.