பொதுவாக சினிமா பிரபலங்கள் என்றால் விலை உயர்ந்த ஆடைகள் , வீடுகள், கார்கள், பொருட்களைத்தான் பயன்படுத்துவார்கள் என்பது பலருக்கும் தெரிந்தத விஷயம்.அதேபோல் நகைகள், ஹேண்ட் பேக்குகள் வாட்ச்கள் என அவை லட்சங்கள், கோடிகள் உடையவையாக இருக்கும்.

இந்நிலையில் தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வரும் ஜுனியர் என்டிஆர், 7 கோடி ரூபாய் மதிப்புள்ள வாட்ச்சை அணிவதாக ரசிகர்கள் சமீபத்தில் வெளியான அவரின் புகைப்படங்கள் மூலம் கண்டுபிடித்துள்ளனர். அவர் சமீபத்தில் ‘வார் 2’ ஹிந்திப் படப்பிடிப்பில் கலந்து கொள்ள அவர் மும்பை ஏர்போர்ட்டில் இறங்கிய போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தான் அவை.

இது “ரிச்சர்ட் மில்லி ஆர்எம் 40-01 டர்பில்லோன் மெக்லரன் ஸ்பீட்டெய்ல்” என்பது அந்த வாட்ச்சின் பெயர். அதன் விலை சுமார் 7 கோடியே 47 லட்சம் என்கிறார்கள். ஜுனியர் என்டிர் தற்போது ‘வார் 2’ ஹிந்திப் படத்திலும், கேஜிஎப் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் தனது 31வது படத்திலும் நடித்து வருகிறார்.