நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் ‘கல்கி 2898 ஏ.டி’ திரைப்படம் மிகுந்த பிரமாண்டமாக தயாராகிறது. இதில் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோனே, திஷா பதானி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். வைஜயந்தி பிலிம்ஸ் இப்படத்தை தயாரிக்க, இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

மகாபாரதத்தை தழுவி சயின்ஸ் பிக்ஷ்ன் படமாக பன்மொழிகளில் தயாராகி உள்ளது. ஜூன் 27 அன்று திரைக்கு வரும் இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் மற்றும் புரொமோஷன் பணிகள் வெகுவாக நடைபெற்று வருகின்றன. படத்தின் டிரைலர் வரும் 10ம் தேதி வெளியாக உள்ளது.

இந்த படத்தில் கேமியோ கதாபாத்திரங்களில் எஸ்.எஸ். ராஜமவுலி மற்றும் துல்கர் சல்மான் நடிப்பதாக கூறப்பட்டு வந்தது. மேலும், மற்றொரு கேமியோ கதாபாத்திரத்தில் நடிகை மிருணாள் தாகூர் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.