இயக்குனர் சங்கர், இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் கமல் ஹாசன், பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
லைகா மற்றும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. ‘இந்தியன் 2’ திரைப்படம் அடுத்த மாதம் 12-ந்தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இப்படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதில் தமிழ் சினிமாவின் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நெல்சன் திலிப்குமார், மற்றும் சிம்பு உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக வந்திருந்தனர்.
இசைவெளியீட்டு விழாவில் சிம்பு, “கமல்ஹாசன் சார் என்னோட ஸ்கிரீன் குரு. அவரோட ‘தக் லைஃப்’ படத்தில் வேலை செய்வது எனக்கு மிகப் பெரிய அதிர்ஷ்டம்.
நான் இந்தியன் 1-இன் மிகப்பெரிய ரசிகன். இந்தியன் 2, இந்தியன் 3 அப்பறம் கேம் சேஞ்சர் படம் பன்ற ஷங்கர் சாருக்கு ஹாட்ஸ் ஆஃப்” என்று கூறினார்.
அதன்பின் ரசிகர்களிடம்,மக்கள் என்னை எடை குறைசிட்டாரு, டிரான்ஸ்ஃபார்ம் ஆயிட்டாருனு எல்லாம் சொல்றாங்க. ஆனா நம்ம கூட இருக்கிறவங்க ஒருநாள் நம்மல விட்டுட்டு போயிடுவாங்க. நம்ம முடி கூட கொஞ்ச நாளில் கொட்டிடும். ஆனா எப்பொழுதும் நம்ம கூட இருக்க ஒரே விஷயம் நம்ம உடம்புதான். அத நம்ம நல்லா பாத்துக்கணும்” என்று கூறினார்.
பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் சிம்பு, ‘தக் லைஃப்’ படப்பிடிப்பை முடித்துவிட்டுத் தான் இங்கு வந்திருக்கிறேன். அடுத்து, ‘எஸ்.டி.ஆர்.48′ படமும் தொடங்கும். உலகில் அதிக கஷ்டப்படும் ஆள் யார் என்றால் உண்மையை வெளிப்படையாக பேசுபவர்கள் தான். நானும் அதில் ஒருவன். மக்களவை தேர்தல் சமயத்தில் நான் படப்பிடிப்பில் இருந்தேன். சூட்டிங் கேன்சல் செய்து வரும் அளவுக்கு நான் பெரிய ஆள் கிடையாது. ஆனால், ஓட்டுப் போட வராதது எனக்கு வருத்தம்தான். பின் தயாரிப்பாளர் சங்கம் எனக்கு ரெட் கார்டெல்லாம் தரவில்லை. அது எனக்கும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷுக்கும் ஒரு சிறிய பிரச்சனை. அதை நாங்கள் இப்பொழுது பேசி சரி செய்துவிட்டோம்’ என்று கூறினார்.