கமல்ஹாசன் நடிப்பில் ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் உத்தமவில்லன்.கடந்த 2015ம் ஆண்டில் வெளியானது உத்தம வில்லன்.இந்தப் படத்தின் கதை வித்தியாசமான வகையில் உயிரிழக்கும் தருவாயில் ஒரு கலைஞன் தன்னுடைய கடைசி ஆசையாக தான் விரும்பும் கதைக்களத்தில் நடிப்பதாக இப்படம் எடுக்கப்பட்டு இருந்தது.
இயக்குனருய் தயாரிப்பாளருமான லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் உத்தமவில்லன் படத்தை தயாரித்திருந்தது. ஆனால் இந்த படம் எதிர்பார்த்ததைப் போல இல்லாமல் மிகவும் மோசமான தோல்வியை சந்தித்தது.இந்த படத்தின் மூலம் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்வதற்காக திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்துடன் மீண்டும் ஒரு படம் நடித்துக் கொடுப்பதாக கமல்ஹாசன் உறுதி அளித்ததாக சொல்லப்பட்டது.
கிட்டத்தட்ட படம் வெளியாகி ஒன்பது ஆண்டுகள் ஆன நிலையில் இதுவரை நடிகர் கமல்ஹாசன் இது குறித்து எந்த விதமான பதிலும் தகவலும் அளிக்காமல் இருப்பதால் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு தயாரிப்பாளர் சங்கத்திடம் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் சார்பாக தற்போது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அதாவது, தயாரிப்பாளர் சங்கம் நடிகர் கமல்ஹாசனுடன் பேச்சு வார்த்தை நடத்தி அவர் உறுதியளித்தப்படி தங்களுக்கு விருப்பமான கதையில் நடிக்க அவரை ஒப்புக்கொள்ள செய்ய வேண்டும் என்று இந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.