Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

ஒருபக்கம் ‘இந்தியன் 2’ மறுபக்கம் ‘ராயன்’ நடுவில் சிக்கி தவிக்கும் வணங்கான் திரைப்படம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -
LISTEN TO PLAY AUDIO NEWS ?

தமிழ் சினிமாவுக்கு இந்த ஆண்டு மிகப்பெரிய வரவேற்பைப் கொடுத்தது. வரும்.ஜூலை மாதத்தில் இரண்டு மிகப்பெரிய படங்கள் வெளியாக உள்ளன. ஜூலை 12ஆம் தேதி ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 2’ படம் வெளியாகிறது. ஜூலை 26ஆம் தேதி தனுஷ் இயக்கி நடித்துள்ள ‘ராயன்’ படம் வெளியாகும் என நேற்று அறிவிக்கப்பட்டது. இப்படம் முதலில் ஜூன் 13ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் ‘வணங்கான்’ படத்தை ஜூலை வெளியீடு என அறிவித்திருந்தார்கள். இப்போது, ஜூலை 12 மற்றும் 26 ஆகிய தேதிகளில் இரண்டு பெரிய படங்கள் வருவதால் ‘வணங்கான்’ படத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.அந்த இரண்டு பெரிய படங்களுக்கு முன்பாக ஜூலை 5ஆம் தேதி வெளியிட்டாலும், ஜூலை 19ஆம் தேதி வெளியிட்டாலும், ஒரே வாரம் மட்டுமே தியேட்டர்கள் கிடைக்கும் எனவே, இப்போது ‘வணங்கான்’ படத்தை வேறு ஒரு தேதிக்கு மாற்ற வேண்டிய நிலை உருவாகியுள்ளதாக தெரிகிறது.

இந்தக் காரணத்தால், சில தினங்களுக்கு முன்பு ‘வணங்கான்’ படத் தயாரிப்பாளர், பெரிய படங்களின் வெளியீட்டுத் தேதிகள் குறித்து, “பெரிய படங்களின் ஆக்கிரமிப்பால் சிறிய படங்களின் உழைப்பு வீணாகிறது,” என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News