Saturday, September 14, 2024

என் கேரியரில் தான் மிகவும் அதிகமாக கஷ்டப்பட்டு நடித்த படங்கள் இவைதான்… நடிகர் விக்ரம் டாக்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் விக்ரம் தொடர்ந்து பல ஆண்டுகளாக ஏராளமான ரசிகர்களை தன்னுடைய படங்களால் கட்டிப்போட்டு வருகிறார். விக்ரம் என்றாலே வித்தியாசம் என்பதற்கு இணங்க ஒவ்வொரு படத்திலும் வித்தியாசத்தை கொடுத்து வருகிறார். அந்த வகையில் விக்ரம் நடிப்பில் ஐ, பிதாமகன், ராவணன் படங்கள் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தன.

பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்து முடித்துள்ளார் விக்ரம். இந்த படம் கடந்த ஏப்ரல் மாதத்திலேயே ரிலீசாகவிருந்த சூழலில் தற்போது படத்தின் ரிலீஸ் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தை ஒட்டி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் அடுத்தடுத்த ப்ரோமோஷன்களில் படக்குழுவினர் ஈடுபட திட்டமிட்டுள்ளனர். சென்னை உள்ளிட்ட தென்னிந்திய தென்னிந்தியாவின் சில இடங்களிலும் மும்பையிலும் மற்றும் வெளிநாட்டிலும் இந்த படத்தின் ப்ரோமோஷன்களை மேற்கொள்ள படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்த படத்தின் ட்ரெயிலர் முன்னதாக வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்த நிலையில் படத்திற்கான எதிர்பார்ப்பு தாறுமாறாக எகிறியுள்ளது.

இந்நிலையில் இந்த படம் குறித்து பேட்டியொன்றில் பேசியுள்ள நடிகர் விக்ரம், தன்னுடைய கேரியரில் தான் மிகவும் அதிகமாக கஷ்டப்பட்டு நடித்த படங்கள் பிதாமகன், ஐ மற்றும் இராவணன் என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் இந்த படங்களில் தான் பட்ட கஷ்டங்கள் மூன்று சதவீதம் மட்டுமே என்றும் தங்கலான் படத்தில் 100% கஷ்டப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து அவரது இந்த கஷ்டங்களுக்கு கண்டிப்பாக நல்ல பலன் கிடைக்கும் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

- Advertisement -

Read more

Local News