நடிகர் கவின், இதுவரை சில படங்கள் தான் நடித்துள்ள போதிலும் அவர் பெற்றுள்ள வளர்ச்சி மகத்தானது. ‘லிப்ட்’, ‘டாடா’, ‘ஸ்டார்’ படங்களின் வெற்றிகளைத் தொடர்ந்து, சதீஷ் மாஸ்டர் இயக்கும் ‘கிஸ்’ மற்றும் வெற்றிமாறன் தயாரிக்கும் ‘மாஸ்க்’ படங்களில் கவின் கமிட் ஆகி விட்டார். இதனை ‘தருமி’ என்ற குறும்படத்தை இயக்கி தங்கப் பதக்கம் பெற்ற விக்ரமன் அசோக் இயக்குகிறார்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து, கவினின் எட்டாவது படத்தை லோகேஷ் கனகராஜின் உதவியாளராக இருக்கும் விஷ்ணு எடவன் இயக்குகிறார்.செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிக்க உள்ள இப்படத்தில் கவின் கமிட் ஆகியுள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்தக் கூட்டணியில் கவினுக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இணையவுள்ளார். அவருக்கு 39 வயதும், கவினுக்கு 33 வயதும் என்பதால், வயது வித்தியாசத்தில் காதலித்து திருமணம் செய்து, அதன் பிறகு ஏற்படும் பிரச்சனைகளை மையமாகக் கொண்டு ஒரு வித்தியாசமான கதையாக இது இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

நயன்தாரா சமீபத்தில் நடித்த ‘அன்னபூரணி’ படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அதைத் தொடர்ந்து, ‘டெஸ்ட்’, ‘மண்ணாங்கட்டி’, ‘டியர் ஸ்டூடண்ட்ஸ்’ போன்ற படங்களில் நடிக்கிறார். இந்நிலையில், கவினும் இணைந்து புதிய படத்திற்கு அடிக்கல் நாட்டியுள்ளார். இந்த கூட்டணி ரசிகர்களை உற்சாகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.