Saturday, September 14, 2024

மிரட்டும் மேக்கிங்… வெளியான டிமான்ட்டி காலனி 2 படத்தின் ரிலீஸ் ட்ரெய்லர்! #Demonte Colony 2

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி, ரமேஷ் திலக், சனத் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘டிமான்ட்டி காலனி’. 2015ம் ஆண்டு வெளியான இந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்றது. மு.க. தமிழரசு தயாரிப்பில் உருவான இந்தப் படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டது. 9 ஆண்டுகள் கழித்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது.

முதல் பாகத்தை இயக்கிய அஜய் ஞானமுத்துவே இரண்டாம் பாகத்தையும் இயக்கியுள்ளார். அருள்நிதி நாயகனாக நடிக்கும் இப்படத்தில் பிரியா பவானி சங்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சாம் சிஎஸ் இசையமைத்துள்ள இப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வருகிறது.

இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. VFX கிராஃபிக்ஸ், செட், பின்னணி இசை ஆகியவை திகில் உணர்வை காட்சிகளின் வழியே கட்டமைக்கின்றன. அடுத்தடுத்து நகரும் காட்சிகள் மர்மங்களுடன் கடக்கின்றன. சாம் சிஎஸ் தனது இசையால் கூடுதலாக அச்சுறுத்துகிறார். கலர் டோன், அருள்நிதியுடன் ஏற்படும் மாற்றங்கள் கவனிக்க வைக்கின்றன. ட்ரெய்லர் ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. படம் ஆகஸ்ட் 15ம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

Read more

Local News