ஜெயம் ரவியின் “கோமாளி” படத்தின் மூலம் திரைத்துறையில் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். அடுத்து, “லவ் டுடே” படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமானார். இரு படங்களும் பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் வெற்றியைப் பெற்றன.
தற்போது, பிரதீப் ரங்கநாதன் விக்னேஷ் சிவனின் எல்ஐசி மற்றும் அஸ்வத் மாரிமுத்துவின் டிராகன் படங்களில் நடிப்பதில் மிகவும் பிஸியாக உள்ளார்.
அடுத்ததாக, பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படத்தை சுதா கொங்கராவின் உதவியாளராக பணியாற்றிய கீர்த்தீஸ்வரன் இயக்கவுள்ளார். இதில், பிரதீப்பிற்கு ஜோடியாக மமிதா பைஜூ நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கும் தேதி சீக்கிரம் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிரிஷ் ஏ.டி இயக்கத்தில் வெளியான “பிரேமலு” படத்தில் நஸ்லேன் மற்றும் மமிதா பைஜூ நடித்தனர். இதில் மமிதா பைஜூ ரீனு என்ற கதாபாத்திரத்தில் நடித்தார், இவரது நடிப்பு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து, பல படங்களில் மமிதா பைஜூ நடித்தார். மேலும், தமிழில் அவர் நடித்த முதல் படம் “ரெபல்”, இதில் ஜி வி பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
ஒருபுறம், பிரதீப் ரங்கநாதன் தமிழ் சினிமாவில் ஹிட் படங்களை கொடுத்தவர் என்றால், மறுபுறம், மமிதா பைஜூ மலையாள சினிமாவில் ஹிட் படங்களை வழங்கியுள்ளார். இதனால், இருவரும் இணையும் இந்த புதிய படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.